சீனாவில் மீண்டும் தீவிரமாக பரவி வரும் கோவிட் தொற்று
சீனாவின் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்று தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பீய்ஜிங் நகருக்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 9 பேரின் நிலை கவலைக்கிடம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் தொற்று பரவியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் கடந்த ஜூலை 20ஆம் திகதியன்று கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதுவரை 200 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் கோவிட் தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
நகரில் வசிக்கும் சுமார் 90 லட்சம் பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஷின்ஷுவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
டெல்டா மாறுபாடே வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த தொற்று ரஷ்யாவிலிருந்து நான்ஜிங் நகருக்கு ஜூலை 10ஆம் திகதியன்று வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்பரவு பணியாளருக்கு முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை மோசமாக உள்ளதாக நான்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் டெல்டா திரிபுக்கு எதிராக தடுப்பு மருந்து பொருத்தமானதா என சில சீன சமூக ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri