கினிகத்தேன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கோவிட் சடலத்தை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வாகனமானது வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தின் உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளளத்தில் விழுந்து விபத்திற்கு இலக்காகியுள்ளதாக விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
