யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
வேலைத்திட்டங்கள்
இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
தமிழரசு கட்சி எம்பிக்கள் தொடர்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில் எழுந்துள்ள சர்ச்சை : சுமந்திரனின் விளக்கம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri