சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ்டுரன்ட்கள் மூடப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, சுமார் 2600 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு இன்றையதினம் சந்தைக்கு விடப்பட்டதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், சமையல் எரிவாயுவிற்கு தற்பொழுது நிலவி வரும் தட்டுப்பாடு ஒரு வார காலம் வரையில் நீடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
