மட்டக்களப்பு கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதல் - இரு சிஜடி அதிகாரிகள் கைது
மட்டக்களப்பு நாவலடி தாக்குதல் தவறவிட்ட கமரா உள்ளிட்ட தோல் பையை தேடிச் சென்ற படப்பிடிப்பாளர்கள் மீது தாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினர் என தெரிவித்து 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு குற்ற புலனாய்வு பிரிவு (சிஜடி)யினர் இருவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிஜடி எனக்கூறி தாக்குதல் நடத்தி
இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் படப்பிடிப்பாளர்கள் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை படிப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில் கமரா உள்ளிட்ட பொருட்கள் உடனான பை ஒன்றை படப்பிடிப்பு இடம்பெற்ற பகுதியில் தவறுதலாக விட்டுவிட்டு சென்ற அவர்கள் குறித்த பையை தேடியபோது அவர்கள் கடற்கரையில் விட்டுவிட்டு வந்துள்ளதாக அறிந்து கொண்டனர்
இதனையடுத்து புகைப்பட பிடிப்பு நிறுவனத்தில் கடமையாற்றிவரும் கல்லடியைச் சேரந்த நபருக்கு சம்பவ தினமான 8.00 மணியளவில தொலைபேசியில் கடற்கரையில் தோல் பை விட்டுவிட்டு வந்துள்ளோம் அதனை தேடி எடுத்துவருமாறு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கடற்கரையில் ரோச் லைற் வெளிச்சத்தை பாவித்து குறித்த கமார உள்ளிட்ட தோல்பையை தேடிக் கொண்டிருந்தபோது அங்கு சிஜடி யின் மட்டக்களப்பு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் சாஜன் மற்றும் கொஸ்தாப்பர் உடன் இரு இளைஞர்கள் உட்பட 4 பேர் அமர்ந்து கொண்டிருந்துள்ளனர்.
இவர்கள் மீது ரோச் லைட் வெளிசம் பட்டுள்ளதையடுத்து அவர்கள் குறித்த இளைஞனை கூப்பிட்டு ஏன் எங்கள் மீது ரோச் லைட் அடித்தாய் என வினவியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் உங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி வில்லை நாங்கள் தவறுதலாக விட்டுவிட்டு சென்ற தோல் பையை தேடுவதாக தெரிவித்தபோது அவர்கள் நாங்கள் சிஜடி எனக்கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தமது கையடக்க தொலைபேசி, கைப்பை, தோல்பை, கமரா போன்ற பொருட்களை அங்கு விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று தாக்குதலில் படுகாயமடைந்த வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் நடந்தவற்றை தெரிவித்து அவர்களை கண்டால் அடையாளம் காட்ட முடியும் என முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அன்றைய தினம் மாலையில் தாக்குதலை மேற்கொண்ட சிஜடியினரான இருவரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் கமரா உள்ளிட்ட பொருட்களுடன் பை ஒன்று இருந்த நிலையில் அதனை மீட்டு கொண்டுவந்துள்ளதாக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது பொலிசார் இரு சிஜடியினரையும் தடுத்து வைத்து கொண்டு முறைப்பாடு செய்தவரை வரவழைத்து அவர்களை காட்டினர்.
இதன்போது இவர்கள்தான் சிஜடி யினர் என தங்களை தாக்கியதாக அடையாளம் காட்டிய தையடுத்து இருவரையும் கைது செய்ததுடன் அந்த குழுவைச் சேர்ந்த ஏனைய இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் மட்டக்களப்பில் அமைந்துள்ள சிஜடி பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றி வரும் கம்பளை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ர்ந்தவர் எனவும் மற்றும் அவர்களின் நண்பர்களான மட்டக்களப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் எனவும் இவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |