மட்டக்களப்பு வைத்தியசாலை பிரச்சினைகள் தொடர்பில் செந்தில் தொண்டமான் விளக்கம் (Video)
மட்டக்களப்பு வைத்தியசாலை தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி தீர்வை பெற்றுத்தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவலடியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ஆய்வு
“நமது நாட்டில் சுகாதார துறையில் நிறைய கட்டுப்பாடுகள் காணப்படுவதால் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்களை கொண்டே சுகாதார துறை இயங்கி வருகின்றது.
பெரும்பாலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால் தற்போது நாட்டில் இருக்கும் மருத்துவர்களுக்கு நாம் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை ஆய்வு செய்வதோடு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை மேற்கொள்வோம்.
மேலும் மட்டக்களப்பு வைத்தியசாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் குறித்த வைத்தியசாலை தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசிடம் நான் தெளிவுபடுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் உயரதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் லட்சண்யா பிரசந்தன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
