கனடாவில் வெகு விமர்சையாக நடைபெற்ற பொங்கல் விழா 2022 (VIDEO)
கனடா - பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழின அழிப்பு நினைவுத்தூபி கட்டுமானத்திற்கு ஆதரவு தேடும் நிகழ்வாக வெகுவிமர்சையாக தமிழ் மரபுத்திங்கள் இணையவழி பெருவிழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த இணையவழி பெருவிழா 2022 22-01-2022 , சனிக்கிழமை கனேடிய நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் நிகழ்வு கனடாவில் வெகுவிமர்சையாக எமது ஐபிசி தமிழின் ஊடக அனுசரனையுடன் நேரலையாக இடம்பெற்றிருந்தது.
இந்த பொங்கல் விழா 2022 கோவிட் பரவல் அச்சுறுத்தல் பாதுகாப்புக் காரணமாக இணையம் வழியாக மெய்நிகர்
நிகழ்வாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களைக் கவரும் வண்ணம் மாறுபட்ட வகையில்
மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது.
தமிழினத்தின் மாண்பினை வெளிக்காட்டும் வகையிலமைந்திருந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இம்முறையும் தமிழ்த் தேசிய எழுச்சி நடனங்களாகவும் , பாடல்களுமாக பொங்கல் விழாவினை சிறப்பித்திருந்தன.
தமிழ்ப்பாரம்பரியத்தை போற்றி வரும் முன்னணி கலைஞர்களும் மற்றும் நடன இசைப் பள்ளி மாணவர்களும் இவ்வாண்டும் இந்தப் பொங்கல் நிகழ்வினில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இளம் கலைஞர்கள் தமது கலைத் திறமையினால் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தம்மை வெளிக்காட்டி பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தனர்.
கலை நிகழ்ச்சிகளோடு சமாந்தரமாக நடப்பட்ட நிதிசேர் நிகழ்வு பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழின அழிப்பு நினைவுத்தூபி குறித்த கவனத்தை உலகளாவிய நிலையில் பரவிட வழி செய்தது.
குறித்த நிகழ்வின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட பலரும் இந்த நினைவுத்தூபி அமைவதற்கான பங்காளர்களாக மாறியமையும் இங்கு சிறப்புறக் குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்கள் மின்னணுமுறையில் e-transfer வழியாக தம்மாலான நிதியுதவிகளை தொடர்ந்து வழங்கியவாறு இருந்தனர். தவறவிட்டவர்கள் பின்வரும் இணைப்பை அழுத்தி அமைக்கப்படும் தமிழின அழிப்பு நினைவுத்தூபியில் பங்குதாராலாகலாம்.(https://tamilgenocidememorial.org/donation/)
நினைவுத்தூபி அமைவதற்காக உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்ட முதலாவது நிதிசேர் நிகழ்வு இது. கனடாவிலும் மேலும் உலகளாவிய நிலையில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் நினைவுத்தூபி அமைந்திட தமது ஆதரவினை வெளிப்படையாக அறிவித்து ஆதரவளித்து தமிழனத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்த ஒற்றுமையும், நினைவுத்தூபி அமைந்திட நாம் காட்டும் வேகமும், கனடாவின் ஏனைய இனங்களுக்கு ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
இதற்கு மேலும் சிறப்பினை தருவரு போல கனேடிய மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய மூன்று நிலையிலும் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கட்சி பேதமின்றி கலந்து கொண்டதுடன், தமிழின அழிப்பு குறித்த தமது ஆதரவு நிலைப்பாட்டினை உறுதி செய்துள்ளனர்.
நினைவுத்தூபி அமைப்புக் குழுவினருக்கு பக்க பலமாக தாமும் இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் ,இப்பொங்கல் விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும், பேசுபொருளாகவும் தற்போது மாறியிருக்கின்றது.
சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, IBC தமிழ்த் தொலைக்காட்சி வழியாகவும், மேலும் பல்வேறு முன்னணி இணைத்தொலைக்காட்சிகள் ஊடாகவும் உலகளாவிய ரீதியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.
குறித்த விழாவினை கண்டுக்கொள்ள முடியாத உறவுகள் தற்போது இணைந்து பார்வையிடலாம்.
இந்த மெய்நிகர் நிகழ்வை பார்க்க இணைப்பு: https://fb.watch/aNFMohU6h2/ OR https://www.youtube.com/watch?v=lW-u3xt7jaM
நிதிப்பங்களிப்பைத் வழங்குவதற்கான இணைப்பு: https://tamilgenocidememorial.org/donation/
நினைவுத்தூபி குறித்த மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் : https://tamilgenocidememorial.org/













ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri