ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ள தமிழ் தரப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் (16.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.07.2023) இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டது.
கூட்டம் புறக்கணிப்பு
இந்த கலந்துரையாடல் இன்று மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கட்சியின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்றைய தின கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
