அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ரம்பின் ஆதரவாளர்
ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த சர்ச்சையானது அமெரிக்காவிற்குள் உளவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகை இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை முழுமையாக அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை மறுத்து, சர்வதேச ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் புனையப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், "Midnight Hammer" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் ஈரானின் அணு தள உருவாக்கம் மற்றும் இராணுவ பயன்பாட்டிற்கான அணுசக்தி திறனை முற்றிலுமாக அழித்துவிட்டதாக விட்காஃப் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை, உளவுத்துறையின் மதிப்பீட்டை மறுத்து, ட்ரம்பின் அறிவிப்பு சரியானது என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த மோதல் உலகளாவிய அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ட்ரம்ப் நிர்வாகத்தை நிராகரிக்க முயலும் முயற்சியாகவும் குற்றச்சாட்டுக்களும் வலுத்துள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan