ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
சர்வதேச நியதிகளுக்கு அமைய உள்நாட்டு விசாரணை பொறிமுறைமையில் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தவிசாரணைப் பொறிமுறைமை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட வகையில் அமையப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் பொறிமுறைமையை உருவாக்குவதற்கு இலங்கை சர்வதேச ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை ரத்து செய்யுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri