புத்தாண்டின் சுபவேளை நேரம் குறித்தலில் சர்ச்சை: அரச ஜோதிடர்கள் குழு விளக்கம்
தமிழ் சிங்கள புத்தாண்டின் போது நல்லநேரம் அல்லது சுபவேளை நேரம் குறித்தலில் தவறு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கையின் அரச ஜோதிடர்கள் குழு நிராகரித்துள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதிலும் இரவு வேளையிலேயே சடங்குகளுக்கு மிகவும் பொருத்தமான நேரம் அமைவதை அந்த குழு நியாயப்படுத்தியுள்ளது.
குழு உறுப்பினர் ஜோதிடர் ஜி.எம். குணபால கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இரவில் சுப நேரம்
2024 ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 9.05 மணிக்கு சூரியப் பெயர்ச்சி ஏற்படுவதாகவும், சூரியன் மறையும் இரவு 9.05 மணி முதல் ஆறு மணித்தியாலம் இருபத்தி நான்கு நிமிடங்களுக்குள் புத்தாண்டு சடங்குகள் சுப வேளையில் குறிப்பிடப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராகு காலத்தை தவிர்த்து ஆறு மணி 24 நிமிடங்களில் இரவில் சுப நேரம் குறிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு சடங்குகளை இரவில் கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
எனினும் சடங்குகளுக்கு சிறந்த நேரம் இரவிலேயே அமைகிறது என்று குழு உறுப்பினர் ஜோதிடர் ஜி.எம். குணபால தெரிவித்துள்ளார்.
மேலும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான இரவு நேர சுபநேரங்கள் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குழுவின் பெரும்பான்மையானவர்கள் இந்த நேரத்தை அங்கீகரித்த நிலையில், 42 பேரில் ஐந்து உறுப்பினர்களே ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அவர்கள் பகல் நேரத்தில் குறிக்கப்பட்ட சுப நேரங்களை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு, இந்த ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் குழுவுக்கு புதியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |