தேசபந்துவின் நியமனத்தில் வலுக்கும் சர்ச்சை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் படி குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமைக்கான தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, மகிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மனு மீதான விசாரணை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



