பிள்ளையான் - வியாழேந்திரனிடையே தலைதூக்கும் அரசியல் முரண்பாடுகள்
மட்டக்களப்பில் ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையிலான அரசியல் கூட்டணி முரண்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
அண்மைக்காலமாக தென்னிலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களின் நிகழ்வுகளை மட்டக்களப்பில் உள்ள ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர்கள் புறக்கணித்து வரும் சம்பவங்கள் பதிவாகி வருகிறன.
இந்நிலையில், மட்டக்களப்பிற்கு வருகை தந்த மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் நிகழ்வை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் புறக்கணித்திருந்தார்.
அரசியல் ரீதியான போட்டி
அதே நேரம் மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற மகளீர் தின நிகழ்வை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) புறக்கணித்திருந்தார்.
இதன்படி ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான போட்டி செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ள நிலையில் தேசிய அரசியலில் கூட்டணி பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில் அதன் தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்தினரோடு இணைந்து மொட்டு கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற அமைச்சுப் பதவிகளை பெற்ற இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து செயற்படுவதாக தெரிகிறது.
மொட்டு கட்சிக்கு ஆதரவு
இதன் காரணமாக அவர் கிழக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதேவேளை ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக ராஜபக்சகளின் மொட்டு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் உள்ளிட்ட அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோருக்கு இடையிலான தேர்தல் கூட்டணி முரண்பாடுகள் தற்போது மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடாக மாறியிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam
