யாழ்.வீரமாகாளி அம்மன் கோவில் மகோற்சவத்தில் முரண்பாடு : மூவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.
நீதிமன்ற வழக்குகள்
அதன் போது கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan