கிரிக்கெட் அணி தொடர்பில் சர்ச்சைக்குரிய எதிர்கூறல்கள்-போதகர் ஜெரோஹ் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம்
இலங்கை கிரிக்கெட் அணி சம்பந்தமாக சில சர்ச்சைக்குரிய எதிர்வுகூறல்களை வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோஹ் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடந்த 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி சம்பந்தமான அவர் பல முறை பல்வேறு கருத்துக்களை கூறியிருந்துடன் அவை தொடர்பில் அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி வீரர்களுக்கு உபாதை ஏற்படுவது மற்றும் அணியின் வெற்றி தோல்விகள் தொடர்பாக போதகர் பெர்னாண்டோ எதிர்வுகூறல்களை வெளியிட்டிருந்தார்.
உலக கிண்ண போட்டியின் போது நடந்த ஒழுக்க விரோத செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து போர் கொண்ட குழுவை நியமித்தார்.
கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்ட அணியின் பங்களிப்பு மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.