அவுஸ்திரேலியாவில் மாநகரசபை உறுப்பினரொருவரின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!
அவுஸ்திரேலியாவின் Newcastle சபைக்கூட்டத்தின் போது ரொபின்சன் (Robinson) என்ற உறுப்பினரொருவர் மேலாடை (சட்டை )அணியாமல் கூட்டத்தில் கலந்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு இடம்பெற்ற சூம் ஊடான கூட்டத்தின் போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காணொளி ஊடாக கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் மாநகர முதல்வர், குறித்த உறுப்பினர் மேலாடை அணியாமல் இருப்பதினை சுட்டிக்காட்டி அவரை கண்டித்துள்ளதுடன்,மாநகர முதல்வர் Nuatali Nelmes திடீரென பேசுவதினையும் நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து உறுப்பினரான ரொபின்சன் மேலாடையை அணிந்த நிலையில் கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.
"ஒலி-காட்சி இணைப்பு மூலம் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது மாநகர
உறுப்பினர்கள் உரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில் இந்த
சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri