இனவாதிகளை உடன் கட்டுப்படுத்துங்கள்: ரணிலிடம் மாவை வலியுறுத்து

Mervyn Silva Mavai Senathirajah Government Of Sri Lanka
By Rakesh Aug 14, 2023 07:42 PM GMT
Report

"நாட்டில் மீண்டும் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

'இலங்கை பௌத்த சிங்கள நாடு. இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது. நான் வடக்கு, கிழக்குக்குச் செல்லவுள்ளேன். அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்புவேன்' - என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

இனவாதிகளை உடன் கட்டுப்படுத்துங்கள்: ரணிலிடம் மாவை வலியுறுத்து | Control The Racists Insist Mavai On Ranil

"தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதாவது பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைக் கக்கி வருவதுடன் மீண்டும் வன்முறையைத் தூண்டும் - இன மோதலுக்கு வழிவகுக்கும் உரைகளையும் ஆற்றி வருகின்றனர்.

நாகரிகமற்ற வார்த்தைகள்

இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்படியான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது. பௌத்த சிங்கள அரசியல்வாதிகளின் இப்படியான கருத்துக்கள் நாட்டில் மீண்டும் வன்முறையைத் தூண்டும் இன மோதலுக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக வலிந்து வன்முறையை - மோதலை ஏற்படுத்த ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. வடக்கு - கிழக்குக்கு வந்து தமிழர்களின் தலைகளை வெட்டிச் செல்வேன் என்று நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்ட மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, தென்னிலங்கை இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும்.

இப்படியான மோசமான செயற்பாடு தொடர்ந்தால் நாம் ஜனாதிபதியுடன் - அரசுடன் எப்படிப் பேச்சு நடத்துவது? இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தாவிட்டால் அரசுடன் நாம் பேச்சு நடத்த முடியாது. இதை ஜனாதிபதி ரணிலிடம் நேரில் சொல்ல நாம் தயாராக இருக்கின்றோம்." என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US