நாட்டில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம்
கோவிட் - 19 தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்தல், முகக்கவசம் என்ற வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த இலங்கை மக்கள், இப்போது தடுப்பூசித் தொடர்பில் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கான அவசர காலத்திற்கு பயன்படுத்த தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி அளித்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
இதனைவிட இந்த இந்தியாவில் இருந்து 18 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான நிலையில், நாட்டில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் தொற்றுடன் கூடிய நிலைமை சுகாதாரப் பிரிவினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
