மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்ட பகுதிகளில் உள்ள உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி மற்றும் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு அந்தந்த பாடசாலைகளில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் 360க்கும் மேற்பட்ட உயர் தரப்பரிவு மாணவர்கள் தங்களது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் மாணவர்களும் பெற்றோரும்
ஆர்வம் காட்டி வருவதைக் காணமுடிகின்றது.






தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
