அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் மக்கள் எழுச்சி (Photos)
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வந்த “மைனா கோ கம” போராட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டமானது இன்று (06) 12 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அலரி மாளிகையில் இருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டமானது இன்று(06), 28 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





