எதிர்வரும் வாரங்களில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளும் ஆரம்பம்
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நளின் மிரன்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தனியார் பேருந்து சேவைகளும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தனியார் போக்குவரத்துத்துறையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசங்களை
அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் ஆசனங்களுக்கு ஏற்பவே பயணிகள் பயணம் செய்ய
அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நளின் மிரன்டா இதனைத் தெரிவித்துள்ளார்.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
