குடத்தனை பகுதியில் தொடரும் வாள் வெட்டு : இளம் குடும்பஸ்தர் காயம்
குடத்தனை பகுதியில் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்றும் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொடரும் வாள் வெட்டு
இந்த சம்பவத்தில் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, நேற்றிரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச மக்களின் குற்றச்சாட்டு
மேலும், குடத்தனை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று மதியம் இரண்டு குழுக்களுக்கு இடையிலும் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு பருத்தித்துறை பொலிஸாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்னர் மீண்டும் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரிய தரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
