முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்றும் முற்றுகை இடப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று(20.12.2023) குறித்த இடத்தை முற்றுகை இடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்பு காய்ச்சி பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சான்று பொருட்களை மாவட்ட நீதிமன்றத்தில் கையளிக்கும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri