முட்டைகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு! முட்டைப் பண்ணையாளர்கள் விசனம் (video)
புத்தளம் மாவட்டத்தில் முட்டைகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக புத்தளம் பிரதேச முட்டைப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னர் ,3500 ரூபாவாக இருந்த கோழித் தீவனத்தின் விலை தற்பொழுது 18,000 ரூபாவாக அதிகரித்துள்ளமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முட்டைப் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவனத்தின் விலையேற்றம்
தீவனத்தின் விலையேற்றம் காரணமாக பல முட்டைப் பண்ணையாளர்கள் தொழிலை கைவிட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறான நிலை ஏற்பட்டால் தாமும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவதாக புத்தளம் பிரதேச முட்டைப் பண்ணையாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நுகர்வோர் அதிகார சபையினால் 44 ரூபா முதல் 46 ரூபா வரை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளதாகவும் தமக்கு குறித்த விலைக்கு விற்க முடியாமல் இருப்பதாகவும் முட்டைப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தீவணத்தின் விலையைக் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும்
முட்டைப் பண்ணையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.