மன்னாரில் தொடரும் காட்டு யானைகளின் நடமாட்டம்
மன்னார் (Mannar) முருங்கன் பகுதியில் இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பகுதியில் இன்று (23) காலை இரண்டாவது நாளாகவும் யானைகள் நடமாட்டம் காணப்படும் நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர்
மேலும் தெரிவிக்கையில், “உடனடியாக அந்த பகுதியில் இருந்து யானைகளை பிடித்து பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியுள்ளோம். உடனடியாக தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சிறுபோக செய்கை
இந்நிலையில் குறித்த பகுதி மக்கள் யானையால் பீதி அடைந்துள்ளதுடன் தற்போது சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மேலும் இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தென்னை மரங்களை யானை சேதமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறித்த காட்டு யானையை பிடித்து அங்கிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
