நீதிமன்ற அவமதிப்பு - திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு
நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
குறித்த ரிட் மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்குக்குக் காரணமான, திலித் ஜயவீர பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலின் காணொளிப் பதிவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திறந்த நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பித்தார்.
முழுமையான தகவல்களை ஆராயாமல்
அதன்பின்னர், அக்காணொளித் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இந்தக் காணொளியின் மூலம், அவர் வெளியிட்ட கருத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

தாம் நீதிமன்றத்தைக் மதிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கூற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்குவந்ததாக நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் முழு விடயத்தையும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல், விசாரணை அதிகாரிகள் தேர்ந்தெடுத்த பகுதியை மாத்திரமே மன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
ஆகையால் நீதிவான் முழுமையான தகவல்களை ஆராயாமல், குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே எனது சேவைபெறுனருக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கமைய, இவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கும் போது அச்சட்டத்திற்கு இணங்கச் செயற்பட வேண்டிய பொறுப்பு நீதிவானுக்கு உள்ளது. அதற்கமையவே நீதிவான் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்