கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள்: உள்ளூர் வர்த்தகர்கள் விசனம்
உள்ளூர் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொள்கலன்களில் உணவுப் பொருட்கள்,அழகுசாதனப் பொருட்கள், விழாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கை மாலைகள் ,மஞ்சள் மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வர்த்தகர்கள் விசனம்
இந்தநிலையில் பொருட்கள் கப்பலில் இருந்து இறக்கப்படாமையால், கோயில் விழாக்களின் போது, தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்கை மாலை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில கொள்கலன்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளின் கீழ் பொருட்கள் இருந்ததால், மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை சுங்கப் பிரிவினர் கொள்கலன்களை தடுத்து வைக்கப்படுள்ளன.
தீவிர சோதனை
இருப்பினும், கொள்கலன்கள் எதுவும் தடுத்து வைக்கப்படவில்லை என்று சுங்கத்துறை பணிப்பாளர் பி.பி. எஸ் சி நோனிஸ் கூறியுள்ளார்.
மாறாக அதிக கொள்கலன் போக்குவரத்து மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு
தீவிர சோதனை காரணமாக தாமதம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.