கொழும்பு துறைமுகத்தில் குறைவடையும் கொள்கலன் பரிமாற்றங்கள்
நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன.
இதற்கமைய, கொள்கலன் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து காணப்பட்டுள்ளன.
மேலும்,நாட்டில் நிலவிய நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கு பரிமாற்றங்கள் நகர்த்தப்பட்டுள்ளன.
கொள்கலன் பரிமாற்றத்தில் மாற்று வழி

நாட்டில் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் மாற்றம் இருக்கவில்லை. எனினும் பிரதான கப்பல் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து மாற்று வழிகளை தெரிவு செய்ததாக உள்ளூர் கப்பல் முகவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கொள்கலன்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அரசியல் நெருக்கடி

மேலும், ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அலுவலகங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
இதனையடுத்து கொச்சி சர்வதேச துறைமுகம் உட்பட பல தென்னிந்திய துறைமுகங்களில்
ஜூலை வரை போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரித்திருந்தது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri