கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கட்டாய பரிசோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு மதிப்பீடு
இதன்படி குறித்த குழு வாரந்தோறும் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கூடி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்தக்குழுவுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார தலைமையேற்றுள்ளார்.

குழுவில் துறைமுகங்கள் அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல, அர்க்கம் இலியாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரகுமான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
போதிய சோதனைகள் இன்றி கொள்கலன்கள் வெளியேற அனுமதித்தது யார் என்பதைக் கண்டறிதல். இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி வருமான இழப்புகளை மதிப்பீடு செய்தல் உட்பட்ட விடயங்களை இந்த குழு ஆராயவுள்ளது.