நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம்
நுவரெலியா (Nuwara Eliya) - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை குடாஓயா பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளது.
இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் சுமார் ஒரு மணிநேரம் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் உள்ள பாரிய வளைவு பகுதி ஒன்றினை கடக்கும் போது திடீரென வாகனத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து இடையூறு
இதனால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து நுவரெலியா வழியாக அம்பேவல நியூசிலாந்து பாற்பண்ணைக்கு ஏற்றிச்சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக அவ்வீதியின் ஊடாக பயணித்த ஏனைய வாகனங்கள் வீதியின் இரு புறங்களிலும் பயணத்தை தொடர முடியாதவாறு நீண்ட வரிசையில் நின்றதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் மேற்படி வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய உதவியளித்துள்ளனர்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
