வவுனியாவில் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி
வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்கு உதவாத 200 கிலோகிராம் கோழி இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வட பகுதியில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சியை ஏற்றிய வாகனத்தினை வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், குறித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இதயைடுத்து கைப்பற்றப்பட்ட கோழி இறைச்சி மற்றும் வாகனம் என்பவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை போகஸ்வெவ பகுதியில் சுகாதார விதி முறைகளை மீறி உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகரொருவரிடம் பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
