இரு எரிவாயு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனுமதி
தொழில் சார்ந்த மற்றும் உடல் தகன பயன்பாட்டுக்காக எரிவாயுவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்கே இந்த அனுமதியை நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழங்கியுள்ளது.
எனினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை Ethyl Mercacaptanஇன் வாசனை அளவானது 14 ஆக அதிகரிக்கப்படும் வரை உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) வழங்கியிருந்தார்.
அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இது நாட்டில் சர்ச்சை நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் சில தரப்பினர் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தனர்.
என்றபோதும் இன்னொரு தரப்பினர் எரிவாயு கலவையில் ஏற்பட்ட ஏதோவொரு பிரச்சினையே இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri