விரைவில் நிறைவடையவுள்ள கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலை

People Kandy Road Johnstonfernendo
By Kanamirtha Feb 28, 2022 02:50 PM GMT
Report

கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். 

மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலையானது மத்திய மாகாணத்திற்கு மிகவும் விசேடமானது. நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நான் கூறுகின்றேன். நான் நேற்று மாத்தறை சென்றிருந்தேன். இரண்டு மணி நேரத்தில் கடவத்தையை அடைய முடிந்தது. கண்டியிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் போது 4 மணித்தியாலங்களுக்கு மேல் செல்கிறது.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மக்களுக்கு நீங்கள் செய்த சேவையைப் பாராட்டுகிறேன். இந்த வீதிகள் குறுகலாக இருப்பதால், அவற்றை முந்திச் செல்லக்கூட முடியாது. கண்டியிலிருந்து கொழும்புக்குப் பயணிக்க நான்கு மணி நேரம் ஆகும்.

ஒருவேளை இன்னும் அதிகமாக இருக்கலாம். எனவே எமது மத்திய மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உறங்குகிறார்களா என கேட்கிறேன்.

பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில், தலைநகர் கொழும்பு என்பது போல இரண்டாவது தலைநகராகக் கண்டி உள்ளது. ஆனால் எங்கே எமக்கு வீதி என்று கேட்கிறேன். பின்னால் வரிசையாக செல்லும் பாதை தான் நம்மிடம் உள்ளது.

ஏனென்றால் வீதி சிறியது. எனக்கு இப்போது 81 வயதாகிறது. எனவே, நாங்கள் இறப்பதற்கு முன் நெடுஞ்சாலையை நிர்மாணியுங்கள். கண்டி நெடுஞ்சாலையில் எனக்கு பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை.

கண்டியிலிருந்து கொழும்பு வரை அதிவேக நெடுஞ்சாலையை அமையுங்கள். எனக்கு செல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது பொது மக்களுக்காக நெடுஞ்சாலை அமைக்க வேண்டும். இந்த விடயத்தை நாம் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துகிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில்,

2014 நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி நாட்டினார் . இதற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன், அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன் அவை ரத்து செய்யப்பட்டன.

அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018இல் கடந்த அரசே இதனை திறந்து வைத்திருக்க முடியும். அதை அவர்கள் செய்த வழியில் திறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பழிவாங்கல் செய்ததால் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

2017ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2 என இரண்டு பிரிவுகளைக் கடந்த அரசு ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது.

எமது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் ரூபாவை 60 நாட்களுக்குள் வழங்கினார். என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.

அடுத்து மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அனுநாயக்க தேரர் சென்று அந்த வீதியைப் பார்வையிட்டார். இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் 40 கி.மீ. தூரத்தை நிறைவு செய்து அதனை திறக்க முடிந்தது.

நீங்களும் அதே பாதையில் சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அத்துடன் பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி பணிகளை ஆரம்பித்தோம்.

இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, அவை அனைத்தையும் தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர். சாப்பிடுவதற்காக இந்த நெடுஞ்சாலைகள் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.

எமது மக்கள் குருநாகல் அதிவேக வீதியில் மட்டும் 100 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட்டுப் பயணித்துள்ளனர். கடவத்தையில் நுழைந்தவுடன் நேராக ஹம்பாந்தோட்டையில் இறங்க முடியும். ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பணிகள் 2024 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த அபிவிருத்தி செயல்பாடுகளை நிறுத்தவில்லை. எங்களுக்கு டொலர் பிரச்சினை உள்ளது.

எமது நாட்டுக்கு டொலர்களை அனுப்பியவர்களை நாம் நாட்டு மாவீரர்கள் என்று அழைத்தோம்.அந்த நாடுகளில் மக்கள் இறந்த போது எமது நாட்டு மாவீரர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தோம். தற்போது இரண்டு லட்சம் பேர் திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளை எமக்கு தீர்க்க முடியும். வருமானத்தைப் பெருக்கி, செலவைக் குறைத்து இந்த நாட்டை எப்படியாவது அபிவிருத்தி செய்வோம். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, குறித்த நேரத்தில் பணிபுரிந்து, தங்கள் பணியை முறையாகச் செய்தால் பிரச்சினைகள் தீரும். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி, இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும். கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிறைவடையும் வரை பல வருடங்களாக மாநாயக்க தேரர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நெடுஞ்சாலைகள் காரணமாக எவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்துகின்றன? விரைவில் கண்டிக்குச் செல்லமுடிந்தால் இப்பகுதியில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்'' இவ்வாறு கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US