2015ஆம் ஆண்டு மண்சரிவில் சிக்கிய மக்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்
தங்குவதற்கு இடமின்றி துன்பத்தில் வாழ்ந்த லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 24 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமையில் இன்று (04) நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு மண்சரிவு அபாயம் காரணமாக லிந்துலை ஹோல்றீம் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் பாதுகாப்பான தற்காலிகமாக தங்கியிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கான 24 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விசேட பரிந்துரைகளுடன் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
32 இலட்சம் ரூபாய்
தோட்டத்துறை மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் ஏற்பாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இவ் ஒவ்வொரு வீடும், ஒரு வாழ்க்கை அறை, 2 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது மேலும் இந்த வீடு 10 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட உள்ளது.
இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம்,வீதி வசதி மற்றும் சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
வீடுகளின் பயனாளிகள்,லிந்துலை நகர சபையின் தலைவர் மலிந்துவ லியனகே ,தோட்ட அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.





