ஜப்பானின் இணக்கத்துடன் மீள் ஆரம்பிக்கப்படும் 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகள்
இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 ஜப்பானிய திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள செய்திலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஜப்பானின் ஆதரவு
இதற்கமைய, இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
The Japanese government has committed to initiating the construction of 11 projects in Sri Lanka that are currently halted and has also pledged its full support for the new government's program.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 27, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |