ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு டக்ளஸ் பாராட்டு
தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தன்னுடைய முகநூல் பதிவில் இதற்கான நன்றியை டக்ளஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற எரிபொருளுக்கு, லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய் மானியம் வழங்குவதற்கான டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு கடந்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
