அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக நிம்மதி கிடைத்துள்ளது-மகிந்தவுடன் மட்டுமே பிணைப்பு-பசில் ராஜபக்ச
21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக தனக்கு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் பிரதான பொறுப்புகள் சிலவற்றில் இருந்து மீள கிடைத்தமை நிம்மதியானது எனவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
நான் ராஜபக்சவாதி
21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன். தனிப்பட்ட ரீதியில் அந்த முடிவை எடுத்தேன்.
21வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டமை நான் எடுத்த முடிவை அங்கீகரிப்பதாகும். ராஜபக்ச குடும்பத்தினருக்காக நாங்கள் படுபடுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அது உண்மை. நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நான் ராஜபக்சவாதி.குடும்பவாதி. அதில் இருந்து விடுப்பட முடிந்துள்ளது. தற்போது மகிந்த ராஜபக்சவுடன் மாத்திரமே எனது பிணைப்பு உள்ளது.
நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்
பிரதேச சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள மொட்டுக்கட்சியினரை பாதகாப்பது எனது கடமை. அதற்காக நான் நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்.
அவர்களே கட்சியை ஆரம்பித்தனர். அவர்களே முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். அவர்கள் எங்களுடன் இருந்தனர். அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்.
சட்டப்படி நான் பதவிகளை வகிக்க முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினராக வரவும், அமைச்சு பதவியை பெறவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவிக்கு வருவதற்காக நான் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுகின்றேன் என்று என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. சட்டப்படி நான் அந்த பதவிகளுக்கு வர முடியாது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
