பொலிஸ் மா அதிபரின் நியமனத்துக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்
பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனத்துக்கு அரசியலமைப்புப் பேரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உச்சநீதிமன்ற நீதிமன்ற தீ்ர்ப்பின் அடிப்படையில் பதவி விலக்கப்பட்ட நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கிடைத்துள்ள அனுமதி
இந்நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் நீடித்திருப்பதாயின் அதற்கு அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் தேவை என்பதன் அடிப்படையில் பிரியந்த வீரசூரியவின் நியமனம் தொடர்பான சிபாரிசு ஜனாதிபதியினால் அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்றைய தினம் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய அரசியலமைப்புப் பேரவை பிரியந்த வீரசூரிய, பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.