ராஜபக்சக்களின் ஊழல்! அடுத்தக் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்த அநுர அரசு
கடந்த கால அரசாங்கங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்சக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்சக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும். விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியிலும் அதிக ஆர்வம் உள்ளது.
இரண்டு வாரங்களாக இது தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எதிரிகள் தற்போது கவலையில் உள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை, தாஜீடீன் கொலை, எக்னெலிகொட காணாமல் போன விடயம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அத்தோடு, 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
