22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் விவாதம் தொடர்பான தகவல்
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், 2022 அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில சரத்துக்கள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதும் இந்த விதிகளில் ஒன்றாகும்.
நாடாளுமன்றத்தை கலைத்தல்
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தை கலைக்கும் காலத்தை நான்கரை வருடங்களாக அதிகரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில விடயங்கள், உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்படாமல், நாடாளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் காலத்தை நான்கரை வருடங்களாக அதிகரிக்குமாறு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்
அடிப்படையிலேயே அரசாங்கம் செயல்படுவதாக டிலான் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.