போப் பிரான்சிஸை ஆசிய நாட்டில் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதி திட்டம் முறியடிப்பு
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸைக் கொல்ல பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்கும் பகீர் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சதிச் செயலை இந்தோனேசிய பொலிஸார் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புடைய 7 பேர்கள் கைதாகியுள்ளதாகவும், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அழைப்பு ஒலிபரப்பு
பல ஆசிய-பசிபிக் நாடுகளில் 11 நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் சந்திப்புகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான தகவல்களில், கைதாகியுள்ள சந்தேக நபர்களில் ஒருவரது குடியிருப்பை சோதனையிட்டதில், அம்பும் வில்லும், ட்ரோன் விமானம் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் நூல்கள் சிலவும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், போப் தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றதால் அந்த ஏழு பேரும் கோபமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி போப் வருகையின் நேரலை வேளையில், மசூதிகளில் தொழுகைக்கான அழைப்பு ஒலிபரப்பை அரசாங்கம் முடக்கியதும் அவர்கள் கோபத்திற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த 7 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
