ரணிலுக்கு ஆதரவு கோரி மோட்டார் சைக்கிளில் சிலிண்டருடன் செல்ல முற்பட்ட ஆறு பேர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்தவர்களையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
பேரணி செல்ல நடவடிக்கை
குறித்த நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சிலிண்டரை கட்டி கொண்டு, அதனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்வதற்கு தயாராக இருந்துள்ளனர்.
அதனையடுத்து, குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட போது தேர்தல் பதாதைகள் காணப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
