இம்ரான்கானை சிறையில் விஷம் வைத்து கொல்ல சதி - மனைவி உள்துறைச்செயலாளருக்கு அவசர கடிதம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என அவரது மனைவி புஷ்ரா பீபி அச்சம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இம்ரான்கானை எந்த நியாயமும் இன்றி சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தனது கணவர் மீது கடந்த காலங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அட்டாக் சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படுவார் என அச்சப்படுவதாகவும் அந்தக் த் புஷ்ரா பீபி, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டில் படித்தவர் மற்றும் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில்கொண்டு சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும்.
தனது கணவர் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், வீட்டில் சமைத்த உணவை சிறையில் சாப்பிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
