பெருமளவு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சகோதரர்கள் - அதிர்ச்சியில் கிராம மக்கள்
குருநாகலில் நீண்ட காலமாக வசித்து வந்த, 2 கர்ப்பிணி நாய்கள் உட்பட 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏரி சுற்றுவட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பிரபல வர்த்தகர் மற்றும் ஒரு குழு அளித்த முறைப்பாடு தொடர்பாக, பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல், குடியிருப்பாளர்களிடமிருந்து அன்பையும் பராமரிப்பையும் பெற்று வந்த நாய்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
கடும் அதிருப்தி
விலங்கு நல சங்கங்களும் இது தொடர்பாக தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
கைது செய்ய கோரப்பட்ட 2 சந்தேக நபர்களும் ஏரி சுற்றுவட்ட பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இரண்டு சகோதரர்களாகும்.
அவர்கள் சட்டவிரோதமாக கால்நடைகளைக் கடத்துபவர்கள் எனவும் இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 13 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களும், எட்டு நாய்களுக்கு விஷம் கலந்த மாட்டிறைச்சித் துண்டுகளை உணவாகக் கொடுத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இறைச்சித் துண்டு
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளிலிருந்து 2 சந்தேக நபர்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த காட்சிகளில் அவர்கள் இறைச்சித் துண்டுகளை நாய்களுக்கு எப்படி உணவாகக் கொடுக்கிறார்கள் என்பதையும், அவற்றை உண்ணும் நாய்கள் வலியால் உயிரிழக்கின்றது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
அந்த பகுதியில் உள்ள காணிகளில் இரவில் தாங்கள் கொண்டு வரும் மாடுகளை இருவரும் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைத்திருப்பதாகவும், அதன் போது நாய்கள் தொந்தரவு செய்ததால் அவற்றை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



