ஞானசார தேரரை படுகொலை செய்ய சதித்திட்டம் ? தென்னிலங்கை ஊடகம் தகவல்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசாரதேரரை படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இயங்கி வரும் அடிப்படைவாத இயக்கமொன்றின் அடிப்படைவாத ஆயுததாரிகள் சிலர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த ஆயுத குழுவில் சிலர் உள்ளடங்கியிருப்பதாகவும் இவர்கள் மாலைதீவிலிருந்து நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்களை அடுத்து தனது பாதுகாப்பு குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஞானசார தேரருக்குப் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஞானசார தேரர் தங்கியுள்ள விகாரைக்கு மீளவும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் செயற்பாடுகள் ஓர் மதத் தரப்பின் வியாபகத்திற்குத் தடையாகக் காணப்படுவதனால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர் என தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.