மொட்டுக்குள் செயற்படும் சதிகாரக்குழு! சாகர காரியவசம் தகவல்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் சதிகாரக் குழு ஒன்று இருக்கின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பிளவு இருப்பதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், கட்சியில் சிறு கும்பல் ஒன்று உள்ளது. அதில் வழிகெட்ட குழுக்களும், சதிகாரக் குழுக்களும் இருக்கின்றன.
எனினும், அவர்களில் பலர் தற்போது மீண்டும் இணைந்து அரசியல் செய்ய எங்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
இன்றும் எமது கட்சி இந்த நாட்டிலேயே அதிக உறுப்பினர்களையும் அமைப்புப்
பலத்தையும் கொண்ட வலுவான அரசியல் கட்சியாகும். எதிர்வரும் எந்தவொரு
தேர்தலிலும் இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் விட அதிக வெற்றியைப்
பெறக்கூடிய ஒரே கட்சி இந்தக் கட்சிதான் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்" -
என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
