இந்தியாவின் கோரிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்ட இலங்கையின் முன்மொழிவு
ஐக்கிய நாடுகள் (United Nations)சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டுக்கு, இலங்கை சமர்ப்பிப்பது தொடர்பான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் 76வது பிரிவின்படி, அனைத்து கடலோர நாடுகளும் 200 கடல் மைல் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் நீடிக்கப்பட்ட கண்ட அடுக்குகளை கோருவதற்கு உரிமையுள்ளது.
இலங்கையின் கோரிக்கை
இதன்படி, இலங்கை ஒரு கடலோர நாடாக, ஆய்வு மற்றும் நிபுணர்களின் கருத்தைப் பின்பற்றி அதன் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தரவுகளுடன் 2009 மே அன்று இலங்கை தமது கோரிக்கையை முன்வைத்தது.
எனினும் சமகாலத்தில் இந்தியாவும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளமையால், இலங்கையின் கோரிக்கையின் பரிசீலிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |