உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)
அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (17.05.2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், நாவிதன்வெளி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் தர்சினி, போராளிகள் குடும்ப உறவுகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
