யாழ்.மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்பட வேண்டும்..! ஆளுநர் வலியுறுத்து
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை (12.08.2025) நடைபெற்றது.
எவ்வளவு விரைவாக மீள ஆரம்பிக்க முடியுமோ
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதைக் கருதிலெடுத்தே இந்தப் பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நபர் தலையீடின்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருந்தது.
போருக்கு முன்னைய காலங்களில் கிளிநொச்சியில் இரவு நேரச் சந்தை கூட இருந்தது.
இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக மீள ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
