இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மணிக்கக்கல் தொடர்பில் வெளியான தகவல்
இரத்தினபுரில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் தொடர்பில் இரத்தினகல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல்லை உலகிலுள்ள கோடீஸ்வரர்களின் கலைப்பொருட்களுடன் சேர்க்கப்பட வேண்டிய ஒரு பொருள் என அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மாணிக்கத்தின் பெறுமதி குறித்து அறியாத திருடர்களினால் வெளியிடப்படும் தகவல்களை கருத்திற்கொள்ள வேண்டாம் என அவர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு அதிக நிறையுடனான நீலநிற மாணிக்கக்கல் உலகிலேயே ஒன்று தான் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கல்லை வெட்டி ஆபரணங்களுக்குள் பொருத்தி அணிவதனை விடவும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும். குறித்த நீல் கல்லை பல கோடீஸ்வரர்கள் யானை தந்தம் போன்ற கலைப்பொருட்களுடன் பாதுகாக்கவே எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பலநூறு ஆண்டுகளின் பின்னர் கிடைத்த அரிய வகை சொத்து என்பதனால் அவ்வாறான பொருட்களை சேகரிப்பவர்களுக்கு இது மிகவும் பெறுமதியானதென அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
